Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

மார்ச், 2005 க்கான தொகுப்பு

இந்த உலகம் சரீர சுகங்களுக்கானது. இன்பம் என்று இங்கே சொல்லப்படும் எவையும் நேராகவோ மறைமுகமானதாகவோ போய் சேருவது இந்த்ரிய சுகங்களில் தான். அது நல்ல வீடாகட்டும் நிறைய செல்வமாகட்டும். மண், மனை, மனைவி, மக்கள் என்று எல்லாமே இந்த உடல் இருந்து அனுபவித்து, வாழ்ந்து, ஆண்டுஇன்புறுவதாகவே இருக்கிறது.

உலகில் உண்மை என்றால் பொய். தீமை என்றால் நன்மை. தர்மம் என்றால் அதர்மம் என்று இரட்டையாகவேஇருக்கிற பட்சத்தில் சரீர சுகம் என்றால் ஆத்ம சுகம் ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்?
இறைவனை, இறையை [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த நிதி சால சுகமா கீர்த்தனை விசேஷமானது…
ஏ மனமே நிதி.. செல்வம் ஒரு சுகமா?
இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது? அவரவர் மனம் தான் பதில் சொல்லவேண்டும்.மனமோ மயங்கி கிடக்கிறது.
பத்ருஹரி வைராக்கிய சதகத்தில் இப்படி சொல்கிறார்…
अवश्यं यातरश्चिरतरमुशित्वापि विशया वियोगे को मेदस्तयजति न जनो यत्स्वयममून् ।
व्रजन्त: स्वातन्त्र्यादतुलपरितापाय मनस: स्वयं त्यक्ता ह्योते शमसुखमनन्तं विदयधति ॥
அவஸ்யம் யாதராஸ் சிரதரம் உஸித்வாபி விஷயா
வியோகே கோ பேதஸ்த்யாஜதி ந ஜானோ யத் ஸ்வயம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

த்யாகையர் சிறு வயதிலேயே சங்கீதத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவரது குருவான ஸொண்டிவெங்கடரமணய்யா திருவையாற்றில் ஒரு வித்வத் சபையில் தியாகராஜரை பாடுமாறு பணித்தார். உள்ளம் உருகி “தொரகுனாஇடு வண்டி ஸேவ” என்ற பிலஹரி ராக க்ருதியை பாடினார் தியாகராஜர். ஆசாரியனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முடிவில்குருவே “தொரகுனா இடுவண்டி சிஷ்யுடு” என்று புகழ்ந்தார். தியாகராஜருக்கு தஞ்சாவூர் சரபோஜி மகாராஜாவிடம் தாம் பெற்றசில பரிசுகளையும் கொடுத்தார்.

சுமார் 1802 வாக்கில் தஞ்சையை பெருமை வாய்ந்த சரபோஜி மஹாராஜா ஆண்டு வந்தார். [...]

முழு பதிவையும் வாசிக்க »