தொகுப்புக்காக அக்டோபர், 2005

வைஷ்ணவன் என்போன்…

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
(வைஷ்ணவ்)

சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ
(வைஷ்ணவ்)

சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ
(வைஷ்ணவ்)

மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தான் மான் ரெ
(வைஷ்ணவ்)

வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ
-
நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

தமிழாக்கம்
=========

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
வகுப்பேன் அதனை கேளுங்கள்…

சரணம்

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இத்தனை குணங்களும் இவற்றிலும் மேற்பல
எண்ணரும் புதுமைகள் இணைந்தவராம்
உத்தமர் யாரினும் உத்தம வைஷ்ணவன்
உலகம் போற்றிடும் காந்திமகான்;
இத்திரு நாட்டினில் எம்முடன் பிறந்திட
என்ன பெருந்தவம் செய்தோம்நாம்!
பக்தியோ டவன்புகழ் பாடிடும் நம்குலம்
பற்பல ஊழிகள் பலனடைவோம்.

நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை
1948

கருத்துத் தெரிவிக்கவும்

கந்தவேளை துதிக்கும் கார்மேகம்

காளிதாசரின் மேகதூதத்திலிருந்து ஒரு பகுதி…

त्वन्निष्यन्दोच्छ्वसित वसुदा गन्धसंपर्करम्य:
स्नोतोरन्ध्र ध्वनितसुभागं दन्तिभि: पीयमान: ।
नीचैर्वास्यत्युपजिगमिषोर्देवपूर्वं गिरिं ते
शितो वायु: परिणमयिता काननोदुम्बराणाम् ॥

த்வன்னீஷ்யந்த – உச்வசீத் – வசுதா – கந்த: – சம்பர்க-ரம்ய: ஹே மேகமே! சாரல் தூற்றி பெய்த உனது மழையினால் ஊறின பூமியின் வாசத்துடன் சேர்ந்து மனம் மகிழ்விப்பதும், ஸ்நோதோரந்த்ர த்வனிதசுபாகம் – காட்டு யானைகள் தமது துதிக்கைகளால் இனிதான ஒலி எழுப்பிக்கொண்டு நுகரப்படுவதும், கானன உதும்பராணாம் பரிணமயிதா – காட்டு அத்திக்காய்களை பழுக்கச்செய்வதுமான சிதோ வாயு: – இந்த குளிர்ந்த காற்று, தேவபூர்வம் கிரிம் – “தேவ” என்ற சொல்லை முதலில் உடையதான தேவகிரியை (மலையை) உபஜிகமிஷோ – நெருங்கும்போது /அடைகின்றபோதில் தே நி சே வாஸ்யதி – உனக்கு மென்மையாக வீசும்.

விளக்கமாக சொல்வதானால், ஹே மேகமே, நீ போகும் இடம் தேவகிரி. அங்கே போகும் வழியெல்லாம் மழைபெய்து நிலம் ஊறிப்போயிருக்கும். இந்த மண்ணின் வாசனையுள்ள காற்றை யானைகள் ஒலியுடன் இழுத்து சுவாசிக்கும். இந்த குளிர்ந்த காற்று அத்திக்காயைக்கூட பழுக்க வைத்துவிடும். இத்தகைய காற்றானது உன் பயணத்திற்கு உதவியாக மெதுவாக வீசும்.

तत्र स्कन्दं नियतवसतिं पुष्पमेघीकृतात्मा
पुष्पासारै: स्नपयतु भावान् व्योमगङ्गाजलार्र्दै : ।
रक्षाहेतोर्नवशशिभृता वासवीनां चमूनाम्
अत्यादित्यं हृतवहमृखे संभृतं तध्दि तेज: ॥

தத்ர ஸ்கந்தம் நியத வசதிம் – அந்த மலையில் நிரந்தரமாக வசிக்கின்ற கந்த பிரானுக்கு, புஷ்ப மேகி க்ருதாத்மா – உன்னை புஷ்பமயமாக மாற்றிக்கொண்டு வ்யோம கங்கா ஜல – ஆகாய கங்கையின் நீரில் நனைத்த புஷ்பாசாரே – பூ மழையினால் – பதான ஸ்நாபயது – அபிஷேகம் செய்வாயாக. தத – அந்த தெய்வம் வாசவீனாம் சமூனாம் ரக்ஷாஹெதோ – இந்திரனுக்காகவும் அவன் சேனைகளினுடைய பாதுகாப்பிற்காகவும், நவசசிபூதா ஹுத்வஹமூகே சம்பூதம் – சிவபெருமானால் அக்னியிடத்தில் தரப்பட்ட அத்யாதித்யம் – சூரியனையும் பிரகாசத்தில் விஞ்சும் தேஜே: – ஒளிப்பிழம்பல்லவா.

மேகங்கள் விரும்பும் வடிவமெடுக்கூடியவை. அதனால் காளிதாசர், நீர் வடிவமாய் இருக்கும் நீ புஷ்பவடிவமாக மாறு என்கிறார். தாருகன் முதலிய அசுரர்களை கொன்ற கந்த பெருமான் தேவகிரியில் இளைப்பாறுகிறார். ஈஸ்வரனைப்போல் கந்தவேளும் அபிஷேக ப்ரியர் – ஈஸ்வரனின் சக்தியெல்லாம் ஒருமிக்கப்பட்டு சூரியனைவிட ப்ரகாசமாகவும் அக்னிதேவனால் பெற்றுக்கொள்ளப்பட்டவருமானவர் கந்த பெருமான். நவசசிபூதம் – என்பது தேயாத பிறையாக என்றும் புதியதாய் இருக்கும் நிலவை சூடிய சிவபெருமானை குறிக்கிறது.

ज्योतिर्लेखावलयि गलितं यस्य बर्हं भवानी
पुत्रप्रेम्णा कुवलयदलप्रापि कर्णे करोति ।
धोतापाङ्गं हरशशिरुचा पावकेस्तं मयूरं
पक्ष्चादद्रि ग्रहणागुरुभिर्गर्जितैर्नर्तयेथा ॥

ஜ்யோதிர் லேகா வலயி களிதம் – வரிவரியாகவும் வட்ட வடிவினதாகவும் அமைந்த – தன் இடத்திலிருந்து நழுவி விட்டதுமான – யஸ்ய பர்ஹம் – எந்த மயிலின் இறகை, பவானி – பவானிதேவியான பார்வதி, புத்ர ப்ரேமணா – தன் புதல்வனிடம் உள்ள ப்ரேமையினால் குவலய தள ப்ராபி – ஏற்கனவே உள்ள கருங்குவளை பூவிதழுடன் சேர்த்து, கர்ணோ கரோதி – காதருகில்
வைத்துக்கொள்கிறாளோ, ஹரசசி ருசா தெளதாபாங்கம் – சிவபெருமானின் சந்திர ஒளியினால் மேலும் வெளுத்ததும் ஆன – பாவகே தம் மயூரம் – குமரக்கடவுளின் அந்த மயிலை பக்ஷாத் – அபிஷேகம் செய்வாயாக. அர்தி – க்ரஹண குருபி – மலை தடுப்பதால் எதிரொலிக்கின்ற கர்ஜிதை – உனது கர்ஜனைகளால் நர்தயேதா – நடனம் ஆடும் படி செய்…

மேகமே – கந்தபிரானுக்கு அபிஷேகம் செய்தபின், அந்த கார்த்திகேயனது வாகனமான மயிலுக்கும் அபிஷேகம் செய்வாயாக. அது சாதாரணமான மயிலல்ல. பவானிதேவியே தன் குழந்தையான குமரனிடம் அந்த மயிலிடமும் கொள்ளும் அன்பினால் தானாகவே நழுவும் அதன் தோகைப்பீலியை எடுத்து அணிவதுண்டு. அந்த மயில் உன்னைக்கண்டால் மிகவும் சந்தோஷப்படும். உன் இடியோசை அதற்கு மிருதங்கம் போல் கேட்டு நடனமாடும். அதனால் அதனை மகிழ்வித்து கந்தனையும், உமாதேவியான பார்வதியையும் மகிழ்வித்து சேவை செய்வாயாக.

கருத்துத் தெரிவிக்கவும்

ஜகத்குரு – 2

பரமதேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி தவழ்வேணிப்
பவளமேனியர் எனதுதாதையர்
பரமராசியர் அருள்பாலா
மருவி நாயெனை யடிமையாமென
மகிழ்மெய் ஞானமுமருள்வோனே…!
- அருணகிரிநாதரின் திருப்புகழ்

மேலான குருமூர்த்தியும், தனக்கொரு குரு இல்லாதவரும் கங்கையும் சந்திரனும் தரித்த
சடைமுடியினரும், பவளமேனியரும், எனது தந்தையாரும், பரம ரகசியமானவரும் ஆகிய சிவன் என்று அருணகிரி நாதர் தக்ஷிணாமூர்த்தியான சிவத்தை தொழுகிறார்.

चित्रं वटतरोर्मूले व्रुध्दा; शिष्या; गुरुर्युवा:
गुरोस्तु मौनम् व्याक्यानं सिष्यास्तु चिन्नसंशया:


சித்ரம் வடதரோர்மூலே வ்ருதா: சிஷ்யா: குருர்யுவா:

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னசம்ஸயா:

- ஆதிசங்கரர்.

இது ஒரு சித்திரம். அழகிய ஆலமரத்தடியில் வயதான சீடர்கள் மத்தியில் குரு
அமர்ந்திருக்கிறார். சிஷ்யர்களோ வயதானவர்கள். ஆனால் குரு? யெளவன ஸ்வரூபி. அவர்களது பாடம் என்ன தெரியுமா? மெளனம் தான். மெளனமே வ்யாக்யானமாகி சிஷ்யர்களின் சந்தேகங்கள் தூள்துகள்களாகின்றன…

கருத்துத் தெரிவிக்கவும்