உலகப் பற்றனைத்தும் நீங்கிய சுத்தமான அத்வைத நிலையில் உள்ள அனுபவங்களின் தொகுப்பே ந்த ஸ்ரீ ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஸ்லோகங்கள்…
अहं नामरो नैव मर्त्यो न दैत्यो
न गन्धर्वयक्ष: पिशाचप्रभेद: ।
पुमान्नैव न स्त्री तथा नैव षण्ड:
प्रकृष्ट: प्रकाशस्वरूप: शिवोहम् ॥
aham nAmarO naiva marthyOna daithyO
na gandharvayaksha: pisacaprabeda:
puman naiva na sthri thathaa naiva shaNta:
prakrushta prakasa svaroopa: sivOham
நான் தேவனும் அல்ல. மனிதனும் அல்ல. அசுரனும் அல்ல. கந்தர்வன் - ராக்ஷசன் - பிசாசம் என்கிறவர்களை சேர்ந்தவனுமல்ல. ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல. அப்படியே அலியும் அல்ல. ஞானமே வடிவான சிவமே நான்.
अहं नैव बालो युवा नैव वृद्धो
न वर्णी न च ब्रह्मचारी गृहस्थ: ।
वनस्थोपि नाहं न संनयस्तधर्मा
जगज्जन्मनाशैकहेतु: शिवोहम् ॥
aham naiva bAlO yuvA naiva vruddhO
na varnee na cha brahmachAri gruhastha
vanasthOpi nAham na sanyasthadharmA
jagajjanma nAsaika hEthu: sivOham
நான் சிறுவனும் அல்ல. ளைஞனும் அல்ல. கிழவனும் அல்ல. நான்கு வர்ணங்களை சேர்ந்தவனும் அல்ல. நான் ப்ரம்ஹசாரியோ க்ருஹஸ்தனோ வானப்ரஸ்தனோ சந்யாசியோ அல்ல. (நான்கு ஆசிரமங்களையும் சேர்ந்தவனல்ல). ந்த பரந்த உலகின் உற்பத்திக்கும் அழிவுக்கும் காரணமாகவும் சாட்சியாகவும் ருக்கிற உத்தமமான சிவ ஸ்வரூபமே நான்.
अहं नैव मेयस्तिरोभूतमाया
तथैवेक्षितुं मां पृथङ्नास्त्युपाय: ।
समाश्लिष्टकायत्रायोप्यद्वितीय:
सदातीन्द्रिय: सर्वरूप: शिवोहम् ॥
aham naiva mEyasthirObhUthamAyA
thathaivEkshithum mAm pruthang-nasthyupAya:
samAslishta kAya thrAyOpya dvithIya:
sadathIndrIya: sarvarUpa: sivOham
நான் உண்மையாக அறியப்பட்டவனுமல்ல. மாயையினால் மறைக்கப்பட்டவனும் அல்ல. என்னை அறிய வேறு உபாயமும் ல்லை. ஸ்தூலம் - சூக்ஷ்ம - காரணமென்னும் சரீரங்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் ஏகமேவ அத்வதீயமாய் ரண்டாவதென்று ஒன்று ல்லாத படிக்கு எப்போதும் ந்திரியங்களுக்கு எட்டாத அதீந்திரியமான பொருளாய் ருக்கும் சிவம்.
अहं नैव मन्ता न गन्ता न वक्ता
न कर्ता न भोक्ता न मुक्ताश्रमस्थ: ।
यथाहं मनोवृत्तिभेदस्वरूप -
स्तथा सर्ववृत्तिप्रदीप: शिवोहम्: ॥
aham naiva manthA na ganthA na vakthA
na karthA na bhOkthA na mukthAsrmastha:
yathAham manOvruthibhEdasvarUpa
thathA sarvavruthipradhIpa: sivOham
நான் மனதினால் ஆலோசிக்கிறவன் ல்லை. நடந்து செல்லும் தேவையுமில்லை. பேசுபவனும் அல்ல. கர்மேந்த்ரியங்களால் வேலை செய்பவனும் ல்லை, சுக துக்கங்களை அனுபவிப்பவனும் அல்ல. சம்சாரத்திலிருந்து விடுபட்டவனும் அல்ல. என் மனத்தின் திறக்குகளையே உருவமாக கொண்டு அதன் வாயிலாக எல்லா திறக்கிலும் ஒளிபொருந்திய மங்களமான சிவம் நான்.
न मे लोकयात्राप्रवाहप्रवृत्ति -
र्न मे बन्धबुद्धया दुरीहानिवृत्ति: ।
प्रवृत्तिर्निवृत्त्यास्य चित्तस्य वृत्ति -
र्यतस्तन्वहं तत्स्वरूप: शिवोहम् ॥
na mE lokayathra prvAha prvruthi :
na mE bandha - buddhyA durI hanivruthi
pravruththir nivruthyasya chththasya vruthi
yathasthvanvaham thathsvaroopa: sivOham
எனக்கு உலகயாத்திரை தொடர்ந்து நடப்பதற்கான தேவையும் அதற்கான செயலும் அவசியம் ல்லை. அதேபோல் என்னை கட்டுபடுத்தக்கூடிய காரியங்களை தவிர்க்கக்கூடிய தேவையும் ல்லை. ந்த தேவையும் தேவையின்மையும் என் சித்தத்தில் எதனால் ஏற்படுகிறதோ அந்த ஸ்வரூபமான சிவமே நான்.
निदानं यदज्ञानकार्यस्य कार्य
विना यस्य सत्त्वं स्वतो नैव भाति ।
यदाद्यन्तमाघ्यान्तरालान्तराल
प्रकाशात्मकं स्यात्तदेवाहमस्मि ॥
nidanam yadagyanakAryasya karyam
vithA yasya sathvam svathO naiva bhathi
yadAdyantha madyAntharALAntharALa
prakA sathmakam syAthdevAhamasmi
எது அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட காரியங்களுக்கெல்லாம் மூலகாரணமோ எது காரிய காரணங்களை தாண்டி ருக்கிறதோ எது முதலும் நடுவும் முடிவுமாக சோதியுருவாய் ருக்கிறதோ அதுவே நான்.
यतोहं न बुद्धिर्न मे कार्यसिद्धि
र्यतो नाहमङ्गं न मे लिङ्गभङ्गम् ।
हृदाकाशवर्ती गताङ्गत्रयार्ति :
सदा सच्चिदानन्दमूर्ति: शिवोहम् ॥
yathOham na buddhir na mE kAryasidhi:
yathO nAhamangam na mE linga bhanga:
hrudAkAsavarthI gathAnga thrayArthi:
sadA sacchidAnanda mUrthi: sivOham
நான் அறிவல்ல என்பதால் எனக்கு செய்து முடிக்க வேண்டியதென்பது கிடையாது. நான் சரீரமல்ல என்பதால் எனக்கு கெடுதல் என்பது ல்லை. ஹ்ருதயத்தில் ஏற்படும் ஸ்துல சூக்ஷ்ம காரண மென்கிற மூன்று சரீரங்களினுடைய துன்பங்களிலிருந்து விலகியதாய் சச்சிதானந்த மூர்த்தியான சிவமே நான்.
यदासीद्विलासाद्विकार जगद्य
द्विकाराश्रयं नाद्वितीयन्वत: स्यात् ।
मनोबुद्धिचित्ताहमाकारवृत्ति
प्रवृत्तिर्यत: स्यात्तदेवाहमस्मि ॥
yadAsId -vilAsAd - vikAra - jagadyad
vikArAsrayam nAdvithIyathvatha: syad
manObuddhichithahamAkAra vruthi
pravruthi yatha: syad thadEvAhamasmi
எது மலர்வதால் ப்ரபஞ்சமென்னும் மாறுதல் ஏற்பட்டதோ, அப்படியானபோதும் ரண்டாவதென்று ஒன்றில்லாததால் மாறுதலுக்கு டமாவதில்லையோ, எதனால் சித்தம் புத்தி அஹங்காரம் என்கிற வ்ருத்திகளுக்கு ப்ரவ்ருத்தி (முடிவு) ஏற்படுகிறதோ அதுவே நான்.
यदन्तर्वहिर्व्यापकं नित्यसुद्धं
यदेकं सदा सच्चिदानन्दकन्दम् ।
यत: स्थूलसुक्ष्मप्रपञ्चस्य भानं
यतस्तत्प्रसूतिस्तदेवाहमस्मि ॥
yadanthar bahirvyApakam nithyasudham
yadEkam sadA sacchidAnanda kandam
yada sthUla sUkshma prapanchasya bhAnam
yadasthath prasUthis thadevAhamasmi
எது உள்ளேயும் வெளியிலும் வியாபகமாகவும் எப்போதும் சுத்தமாகவும் ருக்கிறதோ எது எப்போதும் ஒன்றாகவே ருந்து கொண்டு சத் - சித் - ஆனந்த ரூபமாகவும் ருக்கிறதோ, எதனால் ஸ்தூலமாகவும் சூக்ஷ்மமாகவும் ந்த ப்ரபஞ்சம் ஏற்படுகிறதோ - எது அந்த ப்ரபஞ்சங்களின் உற்பத்தியோ அதுவே நான்.
यदर्केन्दुविद्युत्प्रभाजालमाला -
विलासास्पदं यत्स्वभेदादिशून्यम् ।
समस्तं जगद्यस्य बन्दात्मकं स्या
द्यत: शक्तिभानं तदेवाहमस्मि ॥
yadadkEndu vidyuth prabhA jAlamAla
vilAsAspadam yath svabhEdAdisUnyam
samastham jagad yasya bandAthmakam syad
yatha: sakthibhAnam thadEvAhamasmi
எது சூரியன் சந்திரன் மின்னல் வை ப்ரகாசிப்பதற்கு காரணமோ, எது தனக்குள்ளும் வெளியிலும் பேதமற்றதோ எதனிடம் ந்த உலகம் கட்டுப்பட்டதோ எதனால் சக்தி உருவகிக்கப்படுகிறதோ அதுவே நான்.
यत: कालमृत्युर्बिभेति प्रकामं
यतश्चित्तबुद्धिन्द्रियाणां विलास:
हरिब्रह्मारुद्रेन्द्रचन्द्रादिनाम
प्रकाशो यत: स्यात्तदेवाहमस्मि ॥
yatha: kAlamruthyur bibhEthi prakAmam
yathaschitha buddhIndriyAnAm vilAsa:
haribrahma rudrEndra chandrAdinAm
prakAso yatha: syad thaEvAhamasmi
எதனிடம் யமனும் மிக அஞ்சுவாரோ, எதனால் சித்தம் புத்தி முதலிய ந்திரியங்கள் விளங்குகின்றதோ, எதனால் விஷ்ணு, ப்ரம்மா, ருத்ரன், ந்திரன், சந்திரன் ஆகியோர் பெயர்கள் விளங்குகின்றதோ, அதுவே நான்.
यदाकाशवत्सर्वगं शान्तरूपं
परं ज्योतिराकारशून्यं वरेण्यम् ।
यदाद्यन्तशुन्यं परं शङ्करास्व्यं
यदन्तर्विभाव्यं तदेवाहमस्मि ॥
yadAkAsavat srvagam sAntha rUpam
param jyOthirAkArasUnyam varEnyam
yadAdyantha sUnyam param sankarAkyam
yadanthar vibhAvyam thadEvAhamasmi
எது ஆகாசம் போல் விரிந்தும், அடங்கியும் , சோதியாகவும், உருவற்றதாகவும், போற்றத்தக்கதாகவும், எது முதல் முடிவற்றதாய், உயர்ந்ததாய், நன்மை செய்வதாய் ருக்கிறதோ எது உள்ளுக்குள் அனுபவிக்கத் தக்கதோ அதுவே நான்.