நாத ப்ரும்மம் 5

Energy cannot be created or destroyed. It pervades everywhere என்பது அறிவியல் தத்துவம். சுவிட்சை தட்டினால் electric powerஐ நிற்க செய்ய முடிகிறது. ஆனால் அதனால் அந்த சக்தியே இல்லை என்று ஆகிவிடுவதில்லை.

பரமாத்மாவும் இப்படித்தான் இந்த ஜீவனுக்குள் நுழைந்திருக்கிறது. அந்தந்த ஜீவனுக்கேற்றபடி ஒளிவீசுகிறது. அழியும் ஒரு ஜீவனுக்காக அழியாத ஆத்மாவிற்கு கர்ம வினைகளால் களங்கம் விளைவித்து விடுகிறோம்.

ஈசாவாஸ்யம் இதம் சர்வம்
யத் கிஞ்ச ஜகத்யம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜிதா
மா க்ர்தா கஸ்யஸ்வித் தனம்
– ஈசோபநிஷத் வாக்கியம்.

எல்லாமே நம்மையும் சேர்த்து இறைவனிடமிருந்து ஏற்பட்டவை. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டவை. இதில் நம்முடையது மற்றவருடையது என்று பொருள்கொண்டு, அதன் பேரில் மற்றொருவருக்கு கிடைத்த பொருளின் மேல் பேராசைப்படக்கூடாது என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் பொருள்.

த்யாக ப்ரும்மம் இந்த நான்காவது சரணத்தில், “பிறர் பொருள்களுக்கு ஆசைப்பட்டேன். என் சுயலாபங்களுக்காக பிறர் மனதை புண் படுத்தினேன்” என்று பொருள்படும் படியாக,

பர தனமுல கொரகு நோருல மடிகரக பலிகி கொடுபு நிம்ப திரிகி அட்டி (டுடுகு கல)

என்று விவரிக்கிறார்.

செல்வம் சுகமானது என்று நம்பவைக்கப் படுகிறது. வீடில்லாதவன் ஒரு பங்களாவை பார்த்தால் நாம் அங்கே வாழ மாட்டோ மா என்று ஏங்குகிறான். பங்களா நம்மை பாதுகாக்கிறதா, அல்லது உள்ளே உட்கார்ந்து கொண்டு நாம் பங்காளாவை பாதுகாத்துக்கொண்டு இருக்கிறோமா என்பது உள்ளே வாழ்பனுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும்.

இந்த ஐந்தாவது சரணத்தில் ,

தன மதினி புவினி செளக்யபு ஜீவனமே யனுசு சதா தினமுலு கடிபே (டுடுகு கல…)

இந்த விஷயத்தைத்தான் த்யாகராஜர், செல்வத்துடன் வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை என்று எண்ணி பொழுதை போக்கிவிட்டேன் என்று சொல்கிறார்.

ஆறாவது சரணத்தில்,

தெலியனி நடவிட க்ஷுத்ருலு வனிதலு ஸ்வவச மொடகு உபதேசிஞ்சி சந்த சில்லி ஸ்வரலயம்புலு லெருங்கனு சிலாத்முல சுபதுலகு சமானமனு (டுடுகு கல…)

என்று த்யாகராஜர், செல்வத்துக்கு அடுத்த படியாக பெண்களை வசப்படுத்துவதும், அவர்களிடம் பெருமை அடித்துக்கொள்வதும் – ஸ்வர லயங்கள் சற்றும் தெரியாத போதும் உண்மையான பெரியவர்களுக்கு நான் சமம் – சற்றும் குறைந்தவனல்ல (சீலாத்முல சுபதுலகு சமானமனு) என்று இறுமாந்து கொள்கிறேன் என்று வெளிப்படுத்துகிறார். இதில் ஒரு சூட்சுமம் போதிக்கப்படுகிறது – அதாவது உண்மையான பக்தனாய் இருப்பவன் பாகவதனாகவும் சுத்த ஸ்வர லயத்துடன் நாதோபாசனை செய்பவனாயும் இருந்து விட்டால் தாசரதியான ஈச்வரனை அடையலாம் – இந்த உலகிலிருந்து விடுபடலாம் என்பதுதான் அது.

த்யாகையர் எப்பேர்ப்பட்ட மகான் ஞானி என்பது சொல்ல வேண்டியதில்லை. அவர் சாமானிய மனிதர்களின்மேல் ஏற்பட்ட பரம கருணையே இத்தகைய சரணங்கள். எவையெல்லாம் பக்தனாக வேண்டிய மனிதனை திசை திருப்பிவிட்டு விடுமோ அவற்றை தன்பேரில் சொல்லிக்கொள்வது நம்மை எச்சரித்து – கண்டித்து நல்வழிப்படுத்துவதற்குத்தான்.

Advertisements

1 பின்னூட்டம் »

 1. சீஷல்ஸ் சீனு . said

  Sir
  Very GLAD and touching to read.
  Thans for your efforts in compiling and presenting them.
  Good wishes and God Bless,
  Namaskarams,
  srinivasan.

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: