Archive for ஜூன், 2005

நாதப்ரும்மம் 6

மனம் சுத்தமாக இருப்பதே சீலம். குணசீலம் என்பர். நல்ல குணமே நிம்மதியான மனதை தருகிறது. பிரதி உபகாரம் எதிர்பாராமல் சில நன்மைகளை செய்யும் போது மனம் எவ்வளவு குளிர்ந்து போகிறது. சீலமான மனமே இறைவனின் இருப்பிடம். நல்ல எண்ணங்கள் பிறக்கும் இடத்தில் தான் சிறிது பலஹீனம் ஏற்பட்டு நல்லது அல்லாத எண்ணங்களும் எழுந்து விடுகின்றன. பாற்கடலில் அமுதும் விஷமும் இருந்தது பே஡ல். ஒரே ஒரு வித்தியாசம். கடுகளவு விஷத்தில் குடம் குடமாய் பாலை கொட்டினாலும் விஷம் குணம் மாறுவதில்லை. ஆனால் எத்தனையோ கொடிய காரியங்கள் செய்து விட்டபோதும் வருந்தி இறைவனை தொழும்போது கர்ம வினைகள் குறைந்து விடுகின்றன.

இதைத்தான் த்யாகராஜர் ஒரு க்ருதியில்

சக்கநி ராஜ மார்க்கமுலு உண்டக.
சந்துல தூரநிலி ஓ மனசா!

ஏ மனமே! அகலமான ராஜபாட்டை ஒன்று கடைத்தேறுவதற்கு இருக்கும் போது தீயவழிகளான சந்து பொந்துகளில் ஏன் நுழைந்து கொள்கிறாய் என்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் இது ஒரு அற்புதமான க்ருதி.

இந்த கெளள ராக கிருதியில் ஏழாவது சரணமும் இத்தகைய பொருளைத்தான் சொல்கிறது.

த்ருஷ்டிகி சாரம்பகு லலனா சதனார்பகசேனா மிததனா அதுலனு
தேவாதிதேவ நேரநம்மிதினி காகனு பாதாப்ஜ பஜனாம்பு மரசின (டுடுகு கல)

எது நல்லது – எது கெட்டது மனதுக்கு தெரிவதில்லை. கண்ணுக்கு அழகாக படுவதையெல்லாம் பற்றிக்கொள்கிறோம். வெளிப்புற தோற்றங்களால் கவரப்பட்டு, பொன் – மண் – பெண் – மக்கட்செல்வம் ஏவலாள்இவையெல்லாம் நிரந்தரமென்றெண்ணி பாவத்திலும் பெரிய பாவமாக உனது பாதங்களை மறந்தோம். ஆற்றில் விழந்ததோடல்லாமல் கல்லையும் கட்டிக்கொண்டு விழுவதுபோல் பாவத்தோடு பெரியபாவமாக இறைவனையும் மறந்து விடுகிறோம் என்கிறார்.

இத்தகைய ஆசைகள் வருமெனில் அதற்கு துணைசெய்ய ஒரு கூட்டம் இருக்கும் அதையும் இவ்வாறுசொல்கிறார் த்யாகையர்

சக்கனி முககமலாம்புனனு சதான மதிலோ ஸ்மரணலேகநி
துர்மதாந்த ஜனுலகொரி பரிதாபமுலசே தகிலி நொகிலி துர்விஷய
துராசலனுரொயு ரொயலேக சதாதமு அபராதினை சபல சித்ருடைன

இந்த எட்டாவது சரணத்தில், இறைவனை பார்த்து – உன்னை மறந்தேன் – கர்வம் அஹம்பாவம்ஆசை இன்ன பிற துர்விஷயங்களால் பிடிக்கப்பட்ட மனிதர் பின்னே அலைந்து தவித்தேன்.நிலையில்லாத மனத்தினால் துன்பத்தை வரவழைத்துக்கொண்டேன் என்று நம்மைப்போலிருந்துசொல்கிறார்.

ஒன்பதாவது சரணத்தில்

மானவதவ துர்லபமு அனுசெஞ்சி பரமானந்தமொந்த லேகா
மதமத்சர காம லோப மோஹுலகு தாசுடை – மோச போதி காக
மொதடி குலஜுடகுசு புவினி க்ஷுத்ருல பனுலுசல்புசுநுதினி காக
நராதமுலனு கொரிசாரஹீன மதமுலனு சாதிம்ப தாரு மா ரு

மானவதவ துர்லபமு என்று ஆரம்பித்து அடுத்த ஜீவனுக்கு ஒரு நன்மையும் செய்ததில்லை. அன்பு செலுத்தியதில்லை. உலகில் மனம்போன போக்கில் செயல்பட்டு அழிந்தேன். பரமானந்தத்தை அடைய முற்படாமல் தீய குணங்களின் வழிநடந்து அதற்கே அடிமையானேன். நற்குடியில் பிறந்திருந்தும் தீய எண்ணங்களால்தாழ்ந்து போனேன் என்கிறார்.

பத்தாவது சரணத்தில்,

சதுலகை கொனாளாஸ்திகை சுதுலகை கோ நாள்ளு தன தடுலகை திரிகிநைய்யா த்யாகராஜாப்த இடுவண்டி (டுடுகு கல)

என் ஆப்தரே… நானொரு முரடனாக சம்சாரம், ஆஸ்தி, மக்கள், தனம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். துரைமகனான நீர்தான் என்னை காப்பாற்ற஧வண்டும் என்கிறார்.

கெளள ராகம் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடியது. உணர்ச்சி பூர்வமானது. இதை த்யாகையர்வெகு அழகாக கையாண்டிருக்கிறார். பலர் இப்பாடலைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்தவரை விளக்கமுற்பட்டிருக்கிறேன். இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் பரவசம் ஏற்பட்டுவிடுகிறது. அந்த முதல் சரணம் ரிஷபத்தில் ஆரம்பிக்கும் போதே இறைவனை காணபது போல் பரவசம்ஏற்பட்டு விடுகிறது.

மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பலமுறை (சில நூறு முறையாவது)கேட்டு கண்கலங்கியது ஒன்றே எனக்கு இந்த க்ருதியைப்பற்றி எழுதவேண்டும் என்ற உத்வேகத்தைஏற்படுத்தியது. த்யாகப்ரும்மம் ஒரு பக்தி சாகரம். ராமபக்தியில் அவர் த்வைத அத்வைத சித்தாந்தங்களை எல்லாம் கடந்தவர் அவர். பரம பக்தரான அவரைப்பற்றி நினைப்பதே மிகவும் புண்ணியமாகும்.

Advertisements

Comments (1)