Archive for ஒக்ரோபர், 2005

வைஷ்ணவன் என்போன்…

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
(வைஷ்ணவ்)

சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ
(வைஷ்ணவ்)

சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ
(வைஷ்ணவ்)

மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தான் மான் ரெ
(வைஷ்ணவ்)

வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

தமிழாக்கம்
=========

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
வகுப்பேன் அதனை கேளுங்கள்…

சரணம்

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இத்தனை குணங்களும் இவற்றிலும் மேற்பல
எண்ணரும் புதுமைகள் இணைந்தவராம்
உத்தமர் யாரினும் உத்தம வைஷ்ணவன்
உலகம் போற்றிடும் காந்திமகான்;
இத்திரு நாட்டினில் எம்முடன் பிறந்திட
என்ன பெருந்தவம் செய்தோம்நாம்!
பக்தியோ டவன்புகழ் பாடிடும் நம்குலம்
பற்பல ஊழிகள் பலனடைவோம்.

நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை
1948

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஜகத்குரு – 2

பரமதேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி தவழ்வேணிப்
பவளமேனியர் எனதுதாதையர்
பரமராசியர் அருள்பாலா
மருவி நாயெனை யடிமையாமென
மகிழ்மெய் ஞானமுமருள்வோனே…!
– அருணகிரிநாதரின் திருப்புகழ்

மேலான குருமூர்த்தியும், தனக்கொரு குரு இல்லாதவரும் கங்கையும் சந்திரனும் தரித்த
சடைமுடியினரும், பவளமேனியரும், எனது தந்தையாரும், பரம ரகசியமானவரும் ஆகிய சிவன் என்று அருணகிரி நாதர் தக்ஷிணாமூர்த்தியான சிவத்தை தொழுகிறார்.

चित्रं वटतरोर्मूले व्रुध्दा; शिष्या; गुरुर्युवा:
गुरोस्तु मौनम् व्याक्यानं सिष्यास्तु चिन्नसंशया:


சித்ரம் வடதரோர்மூலே வ்ருதா: சிஷ்யா: குருர்யுவா:

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னசம்ஸயா:

– ஆதிசங்கரர்.

இது ஒரு சித்திரம். அழகிய ஆலமரத்தடியில் வயதான சீடர்கள் மத்தியில் குரு
அமர்ந்திருக்கிறார். சிஷ்யர்களோ வயதானவர்கள். ஆனால் குரு? யெளவன ஸ்வரூபி. அவர்களது பாடம் என்ன தெரியுமா? மெளனம் தான். மெளனமே வ்யாக்யானமாகி சிஷ்யர்களின் சந்தேகங்கள் தூள்துகள்களாகின்றன…

பின்னூட்டமொன்றை இடுங்கள்