Archive for நவம்பர், 2005

மேலும் சில சுபாஷிதங்கள்…

சுபாஷிதங்களின் வரிசையில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம். சிறியதாகவும், நேரடியான பொருள் பொதிந்ததாகவும் எளிமையாகவும் இருக்கும் ஸ்லோகங்கள் கற்றுக்கொள்பவர்களுக்கு மொழியையும் அதே நேரத்தில் நற்சிந்தனைகளையும் விதைக்கும் ஸ்லோகங்கள் என்ற வரிசையில் இன்னொரு ஸ்லோகம்…

न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारी।
व्ययेकृते वर्धतेव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम्॥

ந சோராஹ்ரயம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விதாதனம் சர்வதனப்ரதானம்

அதை திருட முடியாது. அரசனாலும் அபகரிக்க முடியாது. அண்ணன் தம்பிகளுக்குள்
பங்கிட்டுக் கொள்ள முடியாது. செலவு செய்வதனால் வளரும். மற்ற செல்வங்களின் காரணமாகவும் அது இருக்கிறது. வேறு எது – கல்விதான்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் என்ன? இன்னொரு ஸ்லோகம்…

आहारनिद्राभयमैथुनश्च सामान्यम् एतद्पशुभिर्नराणां ।
धर्मो हि तेषाम् अधिको विशेषः धर्मेणहीनः पशुभिः समानः॥

ஆஹாரா நித்ரா பயா மைதுனாஸ்ச சாமான்யாம் எதத்பசுபிநர்ண்யாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோ விசேஷ: தர்மேண ஹீன: பசுபி: சமான:

உணவு, உறக்கம், பயம், குலம் விருத்தி செய்வது என்று மிருகங்களுக்கும்
மனிதர்களுக்கும் வேறுபாடே இல்லை. ஒன்றைதவிர. தர்மம் என்பது தான் அது.
(எது தர்மம்? – இதை மாணாக்கன் சிந்திக்கவேண்டும் என்பதுதானே நோக்கமே!)
இந்த தர்மம் இல்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடே இல்லை.

இன்னொரு சுபாஷிதம்:

मातृवत् परदारेषु परद्रव्येषुलोष्ठवत्।
आत्मवत् सर्वभूतेषु यः पश्यति सः पण्डितः॥

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்ய லோஷ்டவத்
ஆத்மவத் சர்வபூதேஷு ய: பச்யதி ச பண்டிதா

பிறர் மனைவியை தாயாகவும் பிறர் உடமைகளை மண்ணுக்கு சமமாகவும்
எல்லா உயிர்களையும் தன்னைப்போல் மதிப்பவன் அறிவிற் சிறந்தவனாவான்.

சில ஸ்லோகங்கள் ரொம்ப சாதாரணமாக வாழ்வியல் உண்மைகளை எடுத்து சொல்லும்

लालयेत्‌ पञ्चवर्षाणि दशवर्षाणि ताडयेत्‌।
प्राप्ते तु षोडशे वर्षे पुत्रं मित्रवदाचरेत्‌॥

லாலயதே பஞ்சவர்ஷாணி தசாசவர்ஷாணி தாடயத்
ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரசதாசரத்

ஐந்து வயது வரை மிதமிஞ்சிய அன்பில் குழந்தையை வளர்க்கவேண்டும். அதற்கு பின்
பத்து வருடங்களுக்கு கண்டிப்புடன் நெறிப்படுத்த வேண்டும். பதினாறுக்கு மேல்
பெற்ற பிள்ளையானாலும் நண்பனாக நடத்தவேண்டும்….

अन्नदानं परं दानं विद्या दानम् अतः परम्।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवञ्च विद्यया॥

அன்னதானம் பரம் தானம் வித்யாதானம் அத: பரம்:
அன்னேன க்ஷணிகா த்ருப்தி: யாவஜீவஞ்ச வித்யா:

அன்னதானம் சிறந்தது. அதைவிட கல்விதானம் இன்னும் சிறந்தது.
அன்னம் ஒரு நாளைக்கு திருப்தி அளிக்கும். கல்வி ஆயுள் முழுவதும்
திருப்தி அளிக்கும்.

अतिपरिचयादवज्ञा सन्ततगमनादनादरो भवति।
मलये भिल्लपुरन्ध्री चन्दनतरुकाष्ठमिन्धनं कुरुते॥

அதிபரிசயாதவஞ சந்ததகமநாதனாதரோ பவதி
மலயே பில்லுபுரந்த்ரி சந்தனதருகாஷ்டமிந்தனம் குருதே

பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே அது போல்தான். அதி பரிச்சயம்
வெறுப்பையே வளர்க்கும். மலையில் வாழும் பெண் அடுப்பெறிக்க சந்தனத்தை
உபயோகிப்பாளாம் – அது போல.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்

சுபாஷிதம்

சுபாஷிதம் என்பது சிறு சிறு எளிமையான சொல்வதற்கு இனிமையான ஸ்லோகங்கள். சம்ஸ்கிருத பாடம் கற்றுக்கொள்ளும் போது இத்தகைய சிறுசிறு ஸ்லோகங்களை கற்றுத்தருவார்கள். இந்த வகையான ஸ்லோகங்கள் சொல்வதற்கு கம்பீரமானதாகவும் அந்த மொழியின் மீது ஒரு பிடிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தும் என்பது மறைபொருளாக இருந்தபோதிலும், இத்தகைய ஸ்லோகங்களின் அர்த்தசெறிவு எவரையும் கவரும். சிறுவயதில் கற்றுக்கொள்ள வரும் மாணவனுக்கு இத்தகைய நல்லுரைகளை கற்றுத்தருவதால் எதிர்காலத்தில் அந்த மாணவனின் மனவளம் செம்மையாக அமைவதோடு பலருக்கு வழிகாட்டியாக எடுத்துக்காட்டாக விளங்குவான்.

பொதுவாக சுபாஷிதங்கள் பத்ருஹரியின் சதகத்ரயம் (ச்ருங்கார சதகம் – நீதி சதகம் – வைராக்ய சதகம்)என்று அழைக்கப்படும் சுமார் முன்னூறு ஸ்லோகங்கள் அமைந்த தொகுப்பில் இருந்தே சொல்லிக்கொடுப்பார்கள். அழகைச்சொல்லும் ச்ருங்கார சதகம், வாழ்வியல் முறைகளை சொல்லும் நீதி சதகம், நிதர்சனமான இறுதி உண்மையை சொல்லும் வைராக்ய சதகங்கள் ஒப்புயர்வற்றவை.

இனி சில சுபாஷிதங்களை பார்ப்போம்…

भुमौस्कलित पादानां भूमिरेववलम्बनं ।
त्वयिजात परादानां त्वमेवालम्बनं गुरो ॥

பூமெள ஸ்கலித பாதானாம் பூமிரேவ அவலம்பனம்
த்வயி ஜாத அபராதானாம் த்வமேவ ஆலம்பனம் குரோ!

சீடன் குருவை சரணாகதி அடைந்து சொல்வது இது, “ஹே குரு! எங்கே எந்த உயரத்திலோ பள்ளத்திலோ, மரத்திலோ மண்ணிலோ கீழேயென்று விழுந்தால் தாங்குவது பூமிதான். தெய்வத்துக்கு தீமை செய்தால் அவமதிப்பு செய்தால் குருவிடம் சென்று பரிகாரம் கேட்கலாம். குருவுக்கே அவமதிப்போ தீங்கோ செய்துவிட்டால் எங்கே செல்வது? அதற்கும் அங்கேயேதான் போகவேண்டும்
– குருவே அடைக்கலம்.” – எப்படிப்பட்ட சரணாகதி!

இந்த மாதிரியான ஸ்லோகத்துக்கு ஒத்த இன்னொரு சுபாஷிதம் கூட இருக்கிறது…

राजाराष्ट्र्कृतं पापं राजपापं पुरोहितं ।
भर्तारंस्त्रीकृतं पापं सिष्यपापं गुरुं व्रजेत् ॥

ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம் ராஜபாபம் புரோஹிதம்
பர்த்தாரம் ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்

ராஜா செய்யும் காரியங்களினால் வரும் பாவங்களில் ராஜனை நல்வழிப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் புரோஹிதரை சேரும். பெண்கள் செய்யும் பாவங்கள் அவர்களது கணவர்களையே சேரும். அதேபோல் சீடர்கள் செய்யும் பாவங்கள் குருவையே சேரும். எப்படி பிணைக்கிறது
இந்த ஸ்லோகம்!

இன்னொரு சுபாஷிதம் மனிதனின் சுபாவத்தையும் அறிவையும் பற்றி இப்படி சொல்கிறது…

आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया।
पादं सब्रह्मचारिभ्यः पादम् कालक्रमेण च॥

ஆசார்யாத் பாதமாதத்தே பாதம் சிஷ்யஸ்வமேத்யாய
பாதம் சப்ப்ரம்ஹசாரிப்ய: பாதம் காலக்ரமேனச

பாதம் என்றால் கால் என்னும் உறுப்பு – அல்லது கால் பங்கு என்று அர்த்தம். (நமது பாதத்தையும் கால் என்று ஏன் சொல்கிறோம் – இடுப்புக்கு மேலே பாதி உடல் – இடுப்புக்கு கீழே பாதி உடல் – அதில் பாதி ஒரு பாதமாகவும், இன்னொரு பாதி இன்னொரு பாதமாகவும் இருப்பதால்தான் இந்த உறுப்புக்கு கால் என்றே பெயர்). ஆசார்யனிடம் கற்றுக்கொள்வது ஒரு கால் பங்கு – தானே சுயமாக உய்த்துணர்வது இன்னொரு கால் பங்கு. கூட வாழும் மற்ற மாணவர்களிடமிருந்து ஒரு கால் பங்கு – மீதமிருக்கும் கால்பங்கை காலமே சொல்லித்தரும். – எத்தனை உண்மை!

இன்றைக்கு முடிவாக பத்ருஹரியின் ஸ்லோகம் ஒன்று,

मौनान्मूक: प्रवचनपटुर्वातुलो जल्पको वा धुष्ट:
पाष्रे वसति च सदा दूरस्चाप्रगल्भ:
क्षन्त्या भिरुर्यदिं न सहते प्रायशे नाभिजात:
सेवाध्रम: परमगहनो योगिनामष्यगम्य: ॥

மெளனான்முகா ப்ரவசான்படுர்வாதுலோ ஜல்பகோவா த்ருஷ்ட:
பார்ஷ்வே வஸதி ச ஸதா: துரதஸ்ச ப்ரகல்ப:
க்ஷந்த்யா பிருர்யதி ந ஸஹதே ப்ராயஸோ நபிஜாத:
சேவாதர்ம: பரமகஹனி யோகினாமன்யாகம்யா:

இந்த ஸ்லோகத்தில் பத்ருஹரி சொல்கிறார் – ஜீவனத்துக்காக வேலை (சேவை) செய்யும் ஒரு மனிதன் கண்ணியமாக வாழவே முடியாது. ஒரு சேவகனின் நற்குணங்களெல்லாம் அவனது பலவீனங்களாக பொருள்கொள்ளப்படுகின்றன. குரலுயர்த்தாமல் பணிபுரியும் சேவகன் ஏமாளி ஊமையன் இளிச்சவாயன் என்று கொள்ளப்படுகிறான். தன் விருப்பங்களை உரத்து சொல்லும் சேவகனோ அதிகப்பிரசங்கி எனப்படுகிறான். அருகிலேயே இருந்து சேவை செய்யும் சேவகனை எரிச்சலூட்டுவதாக உணர்வார்கள். அருகிலேயே வராமல் மறைவிலேயே இருப்பவனை வேலைக்கு உகந்தவனாக கருதமாட்டார்கள். மன்னிக்கும் குணமுடைய சேவகனை கோழை என்பார்கள். சகித்துக்கொள்ள முடியாத சேவகனையோ அவமதிப்பவன் என்று கொள்வார்கள். அந்தோ! சேவையின் பாதை சுயத்தை துறந்த யோகிகளால் கூட கடக்க முடியாதது !!!

Comments (1)