நஞ்சுமாமுதாம் எங்கள் நாதரடியார்க்கு!

குலிசம் குஸுமதிதஹனஸ்துஹிநதி வாரம் நிதி: ஸ்தலதி
சத்ருர்மித்ரதி விஷமப்யமருத்தி சிவ சிவேதி ப்ரலபதோ பக்த்யா

‘சிவ சிவ’ என்று பக்தியுடன் கதறும்போது இந்திரனுடைய வஜ்ராயுதமும் மலராகின்றது. நெருப்பு பனிக்கட்டி ஆகிறது. கடலும் நிலமாகின்றது. பகைவனும் நண்பனாகிறான். கொடிய விஷமும் அமுதமாகிறது !

***

அபர சங்கராசாரியார் என்ற பெயர் பெற்ற, சிவ பக்த மஹா புருஷரான அப்பய்ய தீக்ஷிதருக்கு ஒருமுறை அவர் மீது வெறுப்பு கொண்ட எதிரிகள் விஷத்தை உண்ண முடியுமா என்று சவால் விடுத்தார்களாம். கால கூட விஷத்தை அருந்திய நீலகண்டனை துதிக்கும் நீர் விஷபானம் செய்ய முடியுமா? என்று கேட்டார்களாம். ஏளனமென்றாலும் இறைவன் பாற் கொண்ட பக்தியினால் ஒரு குழந்தை கற்கண்டை உண்பதுபோல் விஷத்தை எடுத்து உண்டாராம்.

ந கவி: ந முனி: ந தேவயோகி:
பரமாத்மா சிவேவ கேவலோ அஹம்
அம்ருதம் விஷ மப்யனேகமன்மமைதத்
மதபூதேவ ஜநா: கியன்மமைதத்

நான் ஒரு கவி அல்ல. துறவியும் அல்ல. ஒரு தேவனும் அல்ல. நான் வேறு யாருமல்ல – சாக்ஷாத் சிவமே நான். விஷமும் அமுதமும் மற்றும் எல்லாமும் என்னிடமிருந்தே உண்டாயின. இந்த விஷம் என்னை என்ன செய்யும்?

என்ற மேற்கண்ட ச்லோகத்தை சொல்லி அப்பய்ய தீக்ஷிதர் விஷத்தை உண்டு ஒரு குறையுமின்றி இருந்தாராம். எதிரிகளும் அவர் அந்த நீலகண்டனின் அவதாரமே என்று உணர்ந்து தோற்றார்கள்.

***

சமணர்கள் திருநாவுக்கரசு பெருமானுக்கு விஷம் கொடுத்து கொடுமை செய்த செயலை சேக்கிழார் இவ்வாறு விவரிக்கிறார்:

நஞ்சசுமாமுதாம் எங்கள் நாதரடியார்க் கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமனர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்.

இதன் பொருளாவது எங்கள் நாதனான பரமேச்வரனின் அடியார்க்கு விஷமும் அமுதமாகும் என்ற உறுதியுடன் வஞ்சனை மிகுந்த சமணர்களின் தீச்செயலை நன்கறிந்தே அவர்களிட்ட விஷம் கலந்த பாற்சோற்றை உண்டு ஊனமின்றி இருந்தார்.

பொடியார்க்கு திருமேனிப்புனிதற்கு புவனங்கள்
முடிவார்க்குந் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கு மறவரிய பசுபதியார்தம்முடைய
அடியார்க்கு நஞ்சமுத மாவதுதான் அற்புதமோ?

உடலெங்கும் திருநீறு பூசி பொலிவுடன் விளங்கும் இறைவனுக்கு உலகங்களையெல்லாம் அழிக்கக் கூடிய துன்பம் நீங்கும் படியாக முன்பு விஷம் அமுதமாகும் என்றால், எவர்க்கும் அறிவறிய தன்மை உடையவராகிய அந்த பசுபதியாரின் அடியாருக்கும் விஷம் அமுதமாவது என்ன அற்புதமோ?

Advertisements

1 பின்னூட்டம் »

  1. முருகானந்தம் said

    அருமையிலும் அருமை. மேலும் இந்த இறைப்பணி தொடரட்டும். நன்றி தங்கள் கைங்கரியத்திற்கு.

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: