Archive for அத்வைதம்

ஜீவன் முக்தி

ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவருடைய மற்றொரு படைப்பே யோக வாசிஷ்டம் என்பது பெரியவர்களின் கருத்து. இந்த நூல் முக்கியமாக இடம் பெறுவது ராமருக்கு வசிஷ்டர் செய்த ஆன்மீக உபதேச மொழிகளாகும். ப்ரம்மத்தைப்பற்றியும், ஆத்மாவைப்பற்றியும், ஆத்மா முக்தி அடைவதற்கான யோக ரீதியிலான வழிகளை இந்த க்ரந்தம் எடுத்துக்கூறுகிறது. அத்வைதத்தில் ஸ்ரீசங்கரருக்கு காலத்தால் முற்பட்டு வேதாந்தத்தை உபதேசிப்பதாக கருதப்படும் நூல்களுள் இந்த யோக வாசிஷ்டம், தத்தாத்ரேயரின் த்ரிபுர ரஹஸ்யம் போன்ற க்ரந்தங்கள் மிக முக்கியமானவை.

விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவரும், அத்வைத சந்நியாசியுமான வித்யாரணயர் தமது ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலில் ஜீவன் முக்தி அடைவதை விளக்க இந்த யோகவாசிஷ்டத்தை ஆதாரமாக கையாண்டிருக்கிறார். அத்தகைய இந்த நூலிலிருந்து ஜீவன் முக்தி அடையும் யோகியின் ஏழு நிலைகளை குறித்த பகுதியை பார்க்கலாம்.

ज्ञायनभूमि: शुभेच्छख्या प्रथमा समुदाह्रुता
विचारणा द्वितीया स्यात् तृतीया तनुमानसा ॥
सत्वापत्तिश्चतुर्थी स्यात्तत्तो संसक्तिनामिका
पदार्थोभाविनी षष्टि सप्तमी तुर्यगा स्मृता ॥

ஜீவன் முக்தி அடையும் யோகி முதலில் புனிதமானதை அடைய இச்சை/விருப்பம் உள்ளவனாக இருக்கிறான். இரண்டாவதாக சுயமாக கற்பதினாலும், நல்லோர்களின் சமூகத்தாலும் உண்மையை ஆராய முற்படுகிறான். இந்த உண்மை/மாயை நிலைகளை உணர்வதால் மூன்றாவது நிலையில் அமைதியான மனதினை உடையவனாகிறான்.

இத்தகைய அமைதியான மனநிலையை அடைந்து முதல் மூன்று நிலைகளில் எடுத்த முயற்சியால் தன்னையும் அறிந்து கொண்டு விடுவதால் அடுத்த நான்காவது நிலையில் ப்ரம்மத்தை குறிந்த ஞானத்தை அடைகிறான். இந்த நான்கு நிலைகளில் பெறப்படும் ஞானத்தால் யோகி ஐந்தாவது நிலையில் தனக்கும் உலகிற்கும் உள்ள பற்றை துறக்கிறான். தன் பற்றறுத்து ஆத்ம ஞானத்தை அடைந்த யோகி பேதங்களற்ற நிலையில் தன்னையே துறக்கிறான். ஏழாவது நிலையில் உலக வாழ்வை கடந்தவனாக முக்தியடைந்தவனாகிறான்.

இதற்கு அனுசரணையாக ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தத்தில் வரும் ச்லோகம் ஒன்று இருக்கிறது

सत्सङ्गत्वे निस्सङ्गत्वं निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलितत्वं निश्चलितत्वे जीवन्मुक्तिः ॥

நல்லோரது உறவால் உண்மை உணரப்பட்டு பற்றறுபடுகிறது. பற்றறுத்ததனால் மாயையினால் உண்டாகும் மோகத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. மோகத்திலிருந்து விடுபட்டதனால் அமைதி கிடைக்கிறது. அமைதியிலிருந்து ஜீவன் முக்தி அடையப்படுகிறது.

Advertisements

Comments (4)

Sivoham!

உலகப் பற்றனைத்தும் நீங்கிய சுத்தமான அத்வைத நிலையில் உள்ள அனுபவங்களின் தொகுப்பே ௾ந்த ஸ்ரீ ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஸ்லோகங்கள்…

अहं नामरो नैव मर्त्यो न दैत्यो
न गन्धर्वयक्ष: पिशाचप्रभेद: ।
पुमान्नैव न स्त्री तथा नैव षण्ड:
प्रकृष्ट: प्रकाशस्वरूप: शिवोहम् ॥

aham nAmarO naiva marthyOna daithyO
na gandharvayaksha: pisacaprabeda:
puman naiva na sthri thathaa naiva shaNta:
prakrushta prakasa svaroopa: sivOham

நான் தேவனும் அல்ல. மனிதனும் அல்ல. அசுரனும் அல்ல. கந்தர்வன் – ராக்ஷசன் – பிசாசம் என்கிறவர்களை சேர்ந்தவனுமல்ல. ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல. அப்படியே அலியும் அல்ல. ஞானமே வடிவான சிவமே நான்.

अहं नैव बालो युवा नैव वृद्धो
न वर्णी न च ब्रह्मचारी गृहस्थ: ।
वनस्थोपि नाहं न संनयस्तधर्मा
जगज्जन्मनाशैकहेतु: शिवोहम् ॥

aham naiva bAlO yuvA naiva vruddhO
na varnee na cha brahmachAri gruhastha
vanasthOpi nAham na sanyasthadharmA
jagajjanma nAsaika hEthu: sivOham

நான் சிறுவனும் அல்ல. ௾ளைஞனும் அல்ல. கிழவனும் அல்ல. நான்கு வர்ணங்களை சேர்ந்தவனும் அல்ல. நான் ப்ரம்ஹசாரியோ க்ருஹஸ்தனோ வானப்ரஸ்தனோ சந்யாசியோ அல்ல. (நான்கு ஆசிரமங்களையும் சேர்ந்தவனல்ல). ௾ந்த பரந்த உலகின் உற்பத்திக்கும் அழிவுக்கும் காரணமாகவும் சாட்சியாகவும் ௾ருக்கிற உத்தமமான சிவ ஸ்வரூபமே நான்.

अहं नैव मेयस्तिरोभूतमाया
तथैवेक्षितुं मां पृथङ्नास्त्युपाय: ।
समाश्लिष्टकायत्रायोप्यद्वितीय:
सदातीन्द्रिय: सर्वरूप: शिवोहम् ॥

aham naiva mEyasthirObhUthamAyA
thathaivEkshithum mAm pruthang-nasthyupAya:
samAslishta kAya thrAyOpya dvithIya:
sadathIndrIya: sarvarUpa: sivOham

நான் உண்மையாக அறியப்பட்டவனுமல்ல. மாயையினால் மறைக்கப்பட்டவனும் அல்ல. என்னை அறிய வேறு உபாயமும் ௾ல்லை. ஸ்தூலம் – சூக்ஷ்ம – காரணமென்னும் சரீரங்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் ஏகமேவ அத்வதீயமாய் ௾ரண்டாவதென்று ஒன்று ௾ல்லாத படிக்கு எப்போதும் ௾ந்திரியங்களுக்கு எட்டாத அதீந்திரியமான பொருளாய் ௾ருக்கும் சிவம்.

अहं नैव मन्ता न गन्ता न वक्ता
न कर्ता न भोक्ता न मुक्ताश्रमस्थ: ।
यथाहं मनोवृत्तिभेदस्वरूप –
स्तथा सर्ववृत्तिप्रदीप: शिवोहम्: ॥

aham naiva manthA na ganthA na vakthA
na karthA na bhOkthA na mukthAsrmastha:
yathAham manOvruthibhEdasvarUpa
thathA sarvavruthipradhIpa: sivOham

நான் மனதினால் ஆலோசிக்கிறவன் ௾ல்லை. நடந்து செல்லும் தேவையுமில்லை. பேசுபவனும் அல்ல. கர்மேந்த்ரியங்களால் வேலை செய்பவனும் ௾ல்லை, சுக துக்கங்களை அனுபவிப்பவனும் அல்ல. சம்சாரத்திலிருந்து விடுபட்டவனும் அல்ல. என் மனத்தின் திறக்குகளையே உருவமாக கொண்டு அதன் வாயிலாக எல்லா திறக்கிலும் ஒளிபொருந்திய மங்களமான சிவம் நான்.

न मे लोकयात्राप्रवाहप्रवृत्ति –
र्न मे बन्धबुद्धया दुरीहानिवृत्ति: ।
प्रवृत्तिर्निवृत्त्यास्य चित्तस्य वृत्ति –
र्यतस्तन्वहं तत्स्वरूप: शिवोहम् ॥

na mE lokayathra prvAha prvruthi :
na mE bandha – buddhyA durI hanivruthi
pravruththir nivruthyasya chththasya vruthi
yathasthvanvaham thathsvaroopa: sivOham

எனக்கு உலகயாத்திரை தொடர்ந்து நடப்பதற்கான தேவையும் அதற்கான செயலும் அவசியம் ௾ல்லை. அதேபோல் என்னை கட்டுபடுத்தக்கூடிய காரியங்களை தவிர்க்கக்கூடிய தேவையும் ௾ல்லை. ௾ந்த தேவையும் தேவையின்மையும் என் சித்தத்தில் எதனால் ஏற்படுகிறதோ அந்த ஸ்வரூபமான சிவமே நான்.

निदानं यदज्ञानकार्यस्य कार्य
विना यस्य सत्त्वं स्वतो नैव भाति ।
यदाद्यन्तमाघ्यान्तरालान्तराल
प्रकाशात्मकं स्यात्तदेवाहमस्मि ॥

nidanam yadagyanakAryasya karyam
vithA yasya sathvam svathO naiva bhathi
yadAdyantha madyAntharALAntharALa
prakA sathmakam syAthdevAhamasmi

எது அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட காரியங்களுக்கெல்லாம் மூலகாரணமோ எது காரிய காரணங்களை தாண்டி ௾ருக்கிறதோ எது முதலும் நடுவும் முடிவுமாக சோதியுருவாய் ௾ருக்கிறதோ அதுவே நான்.

यतोहं न बुद्धिर्न मे कार्यसिद्धि
र्यतो नाहमङ्गं न मे लिङ्गभङ्गम् ।
हृदाकाशवर्ती गताङ्गत्रयार्ति :
सदा सच्चिदानन्दमूर्ति: शिवोहम् ॥

yathOham na buddhir na mE kAryasidhi:
yathO nAhamangam na mE linga bhanga:
hrudAkAsavarthI gathAnga thrayArthi:
sadA sacchidAnanda mUrthi: sivOham

நான் அறிவல்ல என்பதால் எனக்கு செய்து முடிக்க வேண்டியதென்பது கிடையாது. நான் சரீரமல்ல என்பதால் எனக்கு கெடுதல் என்பது ௾ல்லை. ஹ்ருதயத்தில் ஏற்படும் ஸ்துல சூக்ஷ்ம காரண மென்கிற மூன்று சரீரங்களினுடைய துன்பங்களிலிருந்து விலகியதாய் சச்சிதானந்த மூர்த்தியான சிவமே நான்.

यदासीद्विलासाद्विकार जगद्य
द्विकाराश्रयं नाद्वितीयन्वत: स्यात् ।
मनोबुद्धिचित्ताहमाकारवृत्ति
प्रवृत्तिर्यत: स्यात्तदेवाहमस्मि ॥

yadAsId -vilAsAd – vikAra – jagadyad
vikArAsrayam nAdvithIyathvatha: syad
manObuddhichithahamAkAra vruthi
pravruthi yatha: syad thadEvAhamasmi

எது மலர்வதால் ப்ரபஞ்சமென்னும் மாறுதல் ஏற்பட்டதோ, அப்படியானபோதும் ௾ரண்டாவதென்று ஒன்றில்லாததால் மாறுதலுக்கு ௾டமாவதில்லையோ, எதனால் சித்தம் புத்தி அஹங்காரம் என்கிற வ்ருத்திகளுக்கு ப்ரவ்ருத்தி (முடிவு) ஏற்படுகிறதோ அதுவே நான்.

यदन्तर्वहिर्व्यापकं नित्यसुद्धं
यदेकं सदा सच्चिदानन्दकन्दम् ।
यत: स्थूलसुक्ष्मप्रपञ्चस्य भानं
यतस्तत्प्रसूतिस्तदेवाहमस्मि ॥

yadanthar bahirvyApakam nithyasudham
yadEkam sadA sacchidAnanda kandam
yada sthUla sUkshma prapanchasya bhAnam
yadasthath prasUthis thadevAhamasmi

எது உள்ளேயும் வெளியிலும் வியாபகமாகவும் எப்போதும் சுத்தமாகவும் ௾ருக்கிறதோ எது எப்போதும் ஒன்றாகவே ௾ருந்து கொண்டு சத் – சித் – ஆனந்த ரூபமாகவும் ௾ருக்கிறதோ, எதனால் ஸ்தூலமாகவும் சூக்ஷ்மமாகவும் ௾ந்த ப்ரபஞ்சம் ஏற்படுகிறதோ – எது அந்த ப்ரபஞ்சங்களின் உற்பத்தியோ அதுவே நான்.

यदर्केन्दुविद्युत्प्रभाजालमाला –
विलासास्पदं यत्स्वभेदादिशून्यम् ।
समस्तं जगद्यस्य बन्दात्मकं स्या
द्यत: शक्तिभानं तदेवाहमस्मि ॥

yadadkEndu vidyuth prabhA jAlamAla
vilAsAspadam yath svabhEdAdisUnyam
samastham jagad yasya bandAthmakam syad
yatha: sakthibhAnam thadEvAhamasmi

எது சூரியன் சந்திரன் மின்னல் ௾வை ப்ரகாசிப்பதற்கு காரணமோ, எது தனக்குள்ளும் வெளியிலும் பேதமற்றதோ எதனிடம் ௾ந்த உலகம் கட்டுப்பட்டதோ எதனால் சக்தி உருவகிக்கப்படுகிறதோ அதுவே நான்.

यत: कालमृत्युर्बिभेति प्रकामं
यतश्चित्तबुद्धिन्द्रियाणां विलास:
हरिब्रह्मारुद्रेन्द्रचन्द्रादिनाम
प्रकाशो यत: स्यात्तदेवाहमस्मि ॥

yatha: kAlamruthyur bibhEthi prakAmam
yathaschitha buddhIndriyAnAm vilAsa:
haribrahma rudrEndra chandrAdinAm
prakAso yatha: syad thaEvAhamasmi

எதனிடம் யமனும் மிக அஞ்சுவாரோ, எதனால் சித்தம் புத்தி முதலிய ௾ந்திரியங்கள் விளங்குகின்றதோ, எதனால் விஷ்ணு, ப்ரம்மா, ருத்ரன், ௾ந்திரன், சந்திரன் ஆகியோர் பெயர்கள் விளங்குகின்றதோ, அதுவே நான்.

यदाकाशवत्सर्वगं शान्तरूपं
परं ज्योतिराकारशून्यं वरेण्यम् ।
यदाद्यन्तशुन्यं परं शङ्करास्व्यं
यदन्तर्विभाव्यं तदेवाहमस्मि ॥

yadAkAsavat srvagam sAntha rUpam
param jyOthirAkArasUnyam varEnyam
yadAdyantha sUnyam param sankarAkyam
yadanthar vibhAvyam thadEvAhamasmi

எது ஆகாசம் போல் விரிந்தும், அடங்கியும் , சோதியாகவும், உருவற்றதாகவும், போற்றத்தக்கதாகவும், எது முதல் முடிவற்றதாய், உயர்ந்ததாய், நன்மை செய்வதாய் ௾ருக்கிறதோ எது உள்ளுக்குள் அனுபவிக்கத் தக்கதோ அதுவே நான்.

Comments (1)

ஜகத்குரு

ஆத்மாவின் பூரணத்துவத்தை உண்மையை உணர்வதே உயிர்கள் உய்வதற்குரிய வழி. அந்த வழியை காண்பித்து உதவ குருவைத்தவிர வேறு ஒருவரும் துணையில்லை. பல வழிகள் பல மதங்கள் பல தத்துவங்கள் இருந்த போதும் குருவின் பெருமை எல்லாவற்றிலும் வலியுறுத்தபட்டிருக்கிறது. வைணவ மரபில் இறைவனுக்கு ஒரு தவறு இழைத்தாலும் பெரிய தண்டனை இல்லை. குருவின் கருணையிருந்தால் போதும் என்ற நம்பிக்கை உண்டு.

அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் சீடன் என்று மூன்று பேர் இருந்த போதும் இவர்கள் மூன்று பேருமே ஒருவர்தான் – உணர்தலில் தான் வேறுபாடு உள்ளது என்ற பொருள் படும்படி ஆதி சங்கரரின் ஸ்லோகங்கள் உண்டு.

ஆதிசங்கரரின் சீடர்களில் தோடகர் என்றொரு மகான். அவர் இயற்றிய
தோடகாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்கள் ஜகத்குருவான ஆதிசங்கரரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகங்கள் மிகவும் கடினமான சங்கத இலக்கண அடிப்படையில் இருந்தாலும் ஓதுவதற்கு மிகவும் அழகானவையாக நயமானதாக இருக்கின்றன.

இந்த தோடகாஷ்டகத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது ஆதிசங்கரரின் பெருமையும் தெய்வீகமும் வெளிப்படுவதோடல்லாமல் அவரிடம் தோடகருக்கிருந்த குருபக்தியும் வெளிப்படையாகிறது.

:ஸ்ரீதோடகாஷ்டகம்:

विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत्कथितार्थनिधे ।
ह्रुदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् ॥

vidhithaakila saasthrasudhajaladhe mahithopanishathkathithaarthanidhe!
hrudhaye kalaye vimalam charanam bhava sankara dhesika may saranam!!

ஹே ஜகத்குரு: பாற்கடலைப்போன்ற சாஸ்த்ர கடலை கற்றுணர்ந்தவரே!
உபனிஷத் என்னும் பெரும் பொக்கிஷத்தின் பொருளை உலகுக்கு உணர்த்தியவரே! என்றும் என் இதயகமலத்தில் வைத்து போற்றும் உமது விமலமான பாதங்களிடம் சரணடைகிறேன் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

करुणावरुणालय पालय मां भवसागरदु:खविदुनहृदम् ।
रचयाखिलदर्शनतत्वविदं भव शंकर देशिक मे शरणम् ॥

karunaavarunaalaya paalaya maam bhavasaagaradhukkhavidhunahrudham
rachayaakiladharsanathathvavidham bhava sankara dhesika may saranam

கருணைக்கடலே! பிறவியினால் உண்டான துன்பகடலிலிருந்து காப்பாற்றுங்கள்.
தத்வ ஞானத்தை நான் அறிந்துணர அருளுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते ।
कलयेश्ररजिवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ॥

bhavathaa janatha suhitha bavitha nijabodhavichaarana charumathe!
kalayeksharajeevavivekavidam bhava sankara dhesika may saranam !!

தங்களாலேதான் ஜனங்கள் ஆத்மானுபவம் பெற்று சுகமடைகின்றனர். சந்தோஷமடைகின்றனர். (நிஜபோத விசாரண) ஜிவனைப்பற்றிய உண்மையை உணர்வதில் சிரேஷ்டரே! எனக்கும் ஜீவ ப்ரம்ம பந்தத்தை உணரும் ஞானத்தை பெறச்செய்யுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता ।
मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ॥

bhava eva bhavaanithi may nitharaam samajaayatha chethasi kauthukitha
mama vaaraya mohamahajaladheem bhava sankara dhesika may saranam

ஹே ஜகத்குரு! நீரே எல்லாம் எனக்கு – என் இறைவனே நீர்தான் என்று
உணரும் போது எனக்கு பரம சாந்தியும் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுகிறது.
எல்லையில்லாத அஞ்ஞானக் கடலிலிருந்து (மோஹமஹாஜலதீம்) நீரே என்னை
காப்பாற்றவேண்டும். நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता ।
अतिदीनमिमं परिपालय मां भव शंकर देशिक मे शरणम् ॥

sukruthe-dhikruthe bhahudha bhavitho bhavitha samadarshanalaalasathaa
athidheenamimam paripaalayamaam bhava sankara dhesika may saranam

பலவிதமான அனுஷ்டான ஆசாரங்களை உணர்ந்து செய்யும் போதுதான் தன்
னையே உணரும் ஆவல் பிறக்கிறது. அதி தீனமிமம் பரிபாலய – மிகவும் தீனனான என்னை காப்பாற்றுங்கள் – எனக்கும் அதை உணர்த்துங்கள் – நீரே
அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

जकतीमवितुं कलिताकृतये विचरन्ति महामहसश्छलत: ।
अहिमांसुरिवात्र विभासि गुरो भव शंकर देशिक मे शरणम् ॥

jagatheemavithum kalithakruthaye vicharanthi mahaamahasaaschalatha
ahimaamsurivaathra vibhasi guro! bhava sankara dhesika may saranam

ஹே குரு! தெய்வம் பல வடிவத்திலும் வேஷத்திலும் உலகைக்காக்க உலவுகி
றது. அந்த வடிவங்களிலெல்லாம் சூரியனைப்போன்று பிரகாசிப்பவரே! – நீரே
அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधी ।
सरणाकगतवत्सल तत्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥

gurupungava pungava kethana the samathamayathaam nahi kopi sudhee
saranaagathavathsala thathvanidhe bhava sankara dhesika may saranam

சிரேஷ்டமான குருவே! – ரிஷபத்தை சின்னமாக கொண்ட இறைவா ! உமக்கு ஈடு எவருமில்லை. அடைக்கலமானவர்களுக்கு சரணாகதி அளிப்பவரான
தத்வ பொக்கிஷமே – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो ।
द्रृतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ॥

vidhitha na maya visadhaikakala na cha kimchana kaanchanamasthi guro
dhruthameva vidhehi krupaam bhava sankara dhesika may saranam

ஞானத்தின் ஒரு பகுதிகூட என்னால் முழுதுமாக பிழையின்றி கற்கப்படவில்லை. கல்வி செல்வத்தின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. ஹே குரு! உமது பரம கருணையினாலே என்னை ஆசீர்வதியுங்கள் – நீரே அடைக்கலம் – ஹே சங்கர தேசிகா:

: தோடகாஷ்டகம் முற்றும் :

பின்னூட்டமொன்றை இடுங்கள்